நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சால் மேடையிலேயே கதறி அழுத இயக்குநர்! வீடியோ
நெஞ்சுக்கு நீதி பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதை கேட்டு, இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மேடையிலேயே அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அருண்ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய போது, மிகப்பெரிய இழப்பை நீங்கள் சந்தித்துள்ளீர்கள் என்று தெரியும். அவர் எப்போதும் உங்களுடன் தான் இருப்பார் என்று அருண்ராஜாவின் மனைவியை குறிப்பிட்டார்.
@ivakarthikeyan பேச்சால் மேடையில் கதறி அழுத @Arunrajakamaraj https://t.co/Ma5WCo7yTs#NenjukuNeedhiFromMay20 #NenjukuNeedhi #NenjukuNeedhiTrailer #Sivakarthikeyan #Arunrajakamaraaj
— Jeevakaran T (@TJeevakaran) May 9, 2022
அதனை கேட்டதும் அருண்ராஜா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். கடந்த ஆண்டு கொரோனாவினால் அவரது மனைவி இறந்தார். அதன் பிறகு துக்கத்தில் இருந்து மீண்டு வந்து திரைத்துறையில் படங்களை இயக்க ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயன் பேசியது அவருக்கு வேதனையை தூண்டியுள்ளது.

சிவகார்த்திகேயன் - அருண்ராஜா காமராஜ் இருவரும் நெருங்கிய நண்பர்கள். சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் 'கனா' என்ற படத்தை அருண்ராஜா இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        