பிரபல நடிகையின் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் மறுப்பு...
தனது 14ஆவது வயதில் திரைப்படங்களில் நடிக்க வந்தவரான பிரபல நடிகை ஒருவர், இயக்குநர்கள் இருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கடந்த வாரம் புகாரளித்திருந்தார்.
பிரபல நடிகை
ஜூடித் (Judith Godreche, 51) என்னும் பிரபல பிரெஞ்சு நடிகை, தனது 14ஆவது வயதில் நடிக்க வந்தவர். தான் நடிக்க வந்த புதிதில் தன்னை வைத்து திரைப்படம் இயக்கிய இரண்டு பிரபல இயக்குநர்கள் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக தற்போது புகாரளித்துள்ளார் ஜூடித்.
ஜூடித்தை வைத்து முதல் திரைப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குநரான Benoît Jacquot. இரண்டாவது திரைப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குநரான Jacques Doillon.
இந்நிலையில், தான் நடிக்க வந்த புதிதில், இந்த இரண்டு இயக்குநர்களுமே தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஜூடித் புகாரளித்துள்ளதைத் தொடர்ந்து, அந்த விவகாரம் நீதிமன்றம் சென்றுள்ளது.
குற்றச்சாட்டுக்கு இயக்குநர் மறுப்பு
இந்நிலையில், ஜூடித்தின் இரண்டாவது படத்தை இயக்கியவரான Jacques Doillon, அவரது குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுவது பொய்கள், போலியான குற்றச்சாட்டுகள் என Jacques Doillon தெரிவித்துள்ளார்.
ஜூடித், 14 வயது முதல், தன் முதல் திரைப்பட இயக்குநரான Benoît Jacquotஉடன், ஆறு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |