திருப்பதி கோவிலில் கிரித்தி சனோனை கட்டியணைத்து முத்தம் கொடுத்த இயக்குநர்! வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோவிலில் நடிகை கிரித்தி சனோனை கட்டியணைத்து முத்தம் கொடுத்த இயக்குநர் ஓம்ராவத்திற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கோவிலில் நடிகைக்கு முத்தம் கொடுத்த இயக்குநர்
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கிரித்தி சனோன். இவர் தற்போது 700 கோடி ரூபாய் செலவில் நடிகர் பிரபாஸ்க்கு ஜோடியாக ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடித்து வரகிறார். சமீபத்தில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை கிரித்தி சனோன கருப்பு சேலையில் மாஸாக என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நடிகர் பிரபாஸ் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து நேற்று ‘ஆதி புருஷ்’ படத்தின் ஹீரோயின் கிரித்தி சனோனும், இயக்குநர் ஓம்ராவத் மற்றும் படக்குழுவினர் திருப்பதி கோவிலுக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
சாமியை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த இயக்குநர் ஓம்ராவத், நடிகை கிரித்தி சனோன் புறப்படும்போது, அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து, திருப்பதி கோவிலுக்குள் இப்படியெல்லாம் நடந்துக்கொள்ளலாமா என்று கேள்வி கேட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Director Om Raut kissing Kriti Sanon (who Played Sita ji ) Out side Tirupati mandir created controversy
— प्रतिभा बतरा (@Deshpremiindia) June 8, 2023
??#WTCFinal2023 #Adipurush #AdipurushTrailer2 #KritiSanon #OmRaut #Prabhas #BhushanKumar #FarmersProtest #WTC2023 #Ashwin #RohitSharma #Disgraceful #luchnowcourt #Kolhapur pic.twitter.com/t6afK04hLr
⚡Fresh Controversy: Adipurush Director #OmRaut caught on camera kissing #KritiSanon on her cheek inside the premises of Tirupati Temple.
— truth. (@thetruthin) June 8, 2023
The duo - Om Raut and Kriti Sanon were spotted at the Lord Venkateswara temple in Tirupati for ‘darshan’.
As per the video, Om Raut gives… pic.twitter.com/b6L5R4Pez9