சினிமாவை விட்டு விலகும் இயக்குநர் மிஷ்கின்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்
அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் டிராகன்.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பிப்ரவரி 21ஆம் திகதி டிராகன் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், சென்னையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் விழாவில் மிஷ்கின் மேடை ஏறியபோது ரசிகர்கள் கூச்சலிட்டதால், தான் கெட்ட வார்த்தை பேச போவது இல்லை என்றார்.
மேலும் நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், ஒரு கொம்பை அறுத்து எடுத்துட்டாங்க, இன்னும் ஒரு கொம்புதான் இருக்கு என்று கூறினார்.
நான் இது மாதிரி விழா மேடைகளுக்கு வராமல், ஒரு வருடம் இடைவெளி விடலாம் என்று நினைத்தேன் என்று கூறிய அவர், பிரதீப் ரங்கநாதனை ப்ரூஸ்லி என்றும், இருவரும் ஆக்ஷன் படத்தில் களமிறங்கக் கூடும் என்றும் தெரிவித்தார்.
விஜய் சேதுபதிக்கு பிறகு பக்குவமான நடிகர் என்றால் பிரதீப் ரங்கநாதன் என்று குறிப்பிட்டார்.
டிராகன் படம் குறித்து பேசிய மிஷ்கினிடம், கடைசியாக படத்தின் கதாபாத்திரங்களின் புகைப்படம் போட்டு காட்டப்பட்டது.
அப்போது தன்னுடைய புகைப்படத்தை பார்த்த மிஷ்கின், சினிமாவில இருந்து சீக்கிரம் வெளியேறப்போகும் இயக்குநர் இவர்தான் என்று கூறி மைக்கை கொடுத்துவிட்டு சென்றார்.
இந்த பதிலை எதிர்பார்த்திடாத படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |