திருமணமான இயக்குநருடன் சமந்தா காதலா? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் மீண்டும் குழப்பம்
இயக்குநர் ராஜ் நிடிமொருவும், சமந்தாவும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக பேசப்படுகிறது.
முன்னதாக நடந்த பிக்கில் பால் விளையாட்டின்போது ராஜுவும், சமந்தாவும் கை கோர்த்தபடி இருந்த புகைப்படம் வெளியாகி அவர்கள் காதலிப்பதாக பேச்சு வந்தது.
ராஜுவும், சமந்தாவும் காதலிப்பதாக பேச்சப்பட்டாலும் அவர்கள் இருவரும் இது பற்றி இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் மீண்டும் ராஜ், டி.கே. இயக்கத்தில் ரக்த் பிரமாண்ட் வெப்தொடரில் நடிக்கவிருக்கிறார் சமந்தா.
ராஜ் மற்றும் டி.கே. தனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களாக கொடுப்பதால் சாதாரண கதாபாத்திரங்களை ஏற்க முடியவில்லை என்கிறார் சமந்தா.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
அதாவது அவர்களது நண்பர் ஒருவரது பிறந்தநாள் கொண்டாட்டம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.
நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சமந்தாவும், ராஜ் நிடிமொருவும் கலந்து கொண்டார்கள்.
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள், சமந்தா ராஜை தான் காதலிப்பதாவும், அதனால் தான் அவருடன் ஜோடியாக சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |