பிரபல இயக்குனர் ஷங்கரின் தாய் திடீர் மரணம்! தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து நடக்கும் துயரம்
பிரபல இயக்குனர் ஷங்கரின் தாய் திடீரென்று உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகையே இந்த கொரோனா அச்சுறுத்தி வருகிறது. கொரோனா காரணமாக திரைப்பிரபலங்கள் பலரும், அவர்களுடைய உறவினர்களும் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மக்கள் மிகுந்த கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படி திரைப்பிரபலங்கள் பலர் தங்களுடைய இணையபக்கத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல இயக்குனர் ஷங்கரின் தாய் எஸ்.முத்துலட்சுமி தன்னுடைய 88 வயதில், வயது மூப்பு காரணமாக, இன்று உயிரிழந்துள்ளார். இவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் தங்கள் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் கடந்த சில நாட்களாகவே திரைப்பிரபலங்களோ அல்லது அவர்களது உறவினர்களோ உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.