500 கோடி மதிப்புள்ள இயக்குநரிடம் விவாகரத்து கோரிய 56 வயது மனைவி! 31 ஆண்டு உறவுக்கு முறிவு
பிரபல ஹாலிவுட் இயக்குநர் சாம் ரைமியின் மனைவி, 31 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்து கோரியுள்ளார்.
விவாகரத்து மனுதாக்கல்
ஸ்பைடர்மேன் படத்தின் மூன்று பாகங்கள் உட்பட பல்வேறு படங்களை இயக்கி பிரபல இயக்குநராக வலம் வருபவர் சாம் ரைமி (Sam Raimi).
64 வயதாகும் சாம் ரைமி 1993ஆம் ஆண்டு கில்லியன் கிரீன்ஸ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், ரைமியுடன் 31 ஆண்டுகால திருமண பந்தத்தில் உள்ள கில்லியன் கிரீன்ஸ், தற்போது விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
சரிசெய்ய முடியாத வேறுபாடுகள்
சாம் ரைமியை பிரிவதற்கான ஆவணங்களை தாக்கல் செய்த அவர், தங்களுக்குள் சரிசெய்ய முடியாத வேறுபாடுகள் இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கு ஆதரவு வேண்டும் மற்றும் ரைமியுடனான சொத்துக்களில் பிரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இயக்குநர் மட்டுமன்றி தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட சாம் ரைமியின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |