பலகோடிகளில் சம்பளம்.., இயக்குநர் ஷங்கரின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர்குள் ஒருவர் என்று புகழப்படுபவர், ஷங்கர்.
இவரது முதல் படமான "ஜெண்டில்மேன்" பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, அடுத்து இயக்கிய காதலன், இந்தியன், ஜீன்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
இயக்குநர் ஷங்கர், 30 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் இருந்தாலும் இதுவரை 16 படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார்.
ஒவ்வொரு படத்தின் வெற்றியை தொடர்ந்தும், அடுத்தடுத்த படங்களுக்கு இவர் தன்னுடைய கதையிலும், கதாபாத்திரங்களிலும் பிரம்மாண்டத்தை கொண்டு வர துவங்கினார்.
ஆரம்பத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த இவர் அப்போது சில ஆயிரங்களையே சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால் இப்போது, அவர் தான் பணிபுரியும் ஒரு படத்திற்கு சுமார் ரூ.50 கோடி வரை சம்பளமாக பெருகிறாராம்.
அந்தவகையில், இவருக்கு மொத்தம் சுமார் 150 கோடிக்கு முதல் 200 கோடி வரை சொத்துகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
சென்னையில் இவர் வாழ்ந்து வரும் வீடு, சுமார் 6 கோடி முதல் 8 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர மும்பையில் இருக்கும் இவரது வீட்டின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.6 கோடியாம்.
மேலும், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ள ஷங்கர், ரோல்ஸ் ராயல்ஸ் கோஸ்ட், BMW, ஆடி, போன்ற சொகுசு கார்களை வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |