படுத்த படுக்கையாக பிரபல இயக்குனரின் மனைவி... சிகிச்சையளிக்க உறுதியளித்த தமிழக அரசு
“என் மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என இயக்குநர் விக்ரமன் கூறியுள்ளார்.
இயக்குநர் விக்ரமன் கூறுகையில்..
இயக்குநர் விக்ரமன் அளித்த பேட்டியில் '' என்னுடைய மனைவி கடந்த 5 வருடங்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது முதுகில் தவறாக செய்த ஆப்ரேஷன் காரணமாக அவரால் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகத்தான் இருந்தார்.
இந்த நிலைமையை நான் பேட்டியில் கூறியதன் காரணமாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மருத்துவர்களை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்து நேரில் பார்த்தார்.
என் மனைவியை பரிசோதித்து பார்த்த பின்னர் சிறப்பான சிகிச்சை அளித்து குணமடையச் செய்கிறோம் என உறுதியளித்தனர்.
என்னுடைய மனைவி குணமாக வேண்டும் அது தான் எனக்கு முக்கியம். இந்த நேரத்தில் முதல்வருக்கும், அமைச்சருக்கும் எனது நன்றிகள்” என்றார் இயக்குநர் விக்ரமன்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |