கழிப்பறையை விட அசுத்தமான மற்றும் அபாயகரமான பொருட்கள் இவைதான்! உங்க அருகிலேயே இருக்கு
கழிப்பறை சுத்தமாக இருக்காது, அங்கு பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும் என்ற பயம் காரணமாகவே அங்கு சென்று வந்ததும், கிருமி நாசினியை வைத்து கைகளை கழுவுகிறோம்
கழிப்பறையை விட அசுத்தமான மற்றும் அபாயகரமான சில பொருட்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?
blueandgreentomorrow
பல்துலக்கும் பிரஷ்
கழிவறையில் இருக்கும் பாக்டீரியாவானது 6 அடி வரை காற்றின் மூலம் பரவக்கூடியது. இது டூத் பிரஸில் இரண்டு மணிநேரம் வரை உயிர் வாழும் தன்மை கொண்டதாம்.
ஸ்பாஞ்ச்
சமையலறையில் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஸ்பான்ஞ்ச் போன்றவற்றில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன. இது பல மடங்கும் கழிவறையை விட அபாயகரமானதாகும்.
The Spruce / Ulyana Verbytska
காய்கறியை வெட்ட பயன்படுத்தும் பலகை
காய்கறிகள், மாமிசத்தை நறுக்க பயன்படுத்தும் பலகையில் அபாயகரமான பாக்டீரியாக்கள் அதிகமாக வாழ்கின்றன.
ஹொட்டல் மெனு கார்டு
ஹொட்டல்களில் வழங்கப்படும் மெனு கார்டுகளில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாக்டீரியாக்கள் உள்ளன. இது கழிப்பறையை விட 10 மடங்கு அதிகம்.
செல்போன்கள்
உங்களது செல்போன்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதில் கழிப்பறையை விட 10 மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் உள்ளன.
Shutterstock/ImYanis