இந்திய ரயிலில் அசுத்தமான கழிவறை.., வெளிநாட்டு பெண் எடுத்த வீடியோ வைரல்
இந்தியாவில் உள்ள ரயிலில் கழிவறை அசுத்தமாக இருப்பதை வெளிநாட்டு பெண் ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்டது பேசப்பட்டு வருகிறது.
ரயிலில் கழிவறை
வீடியோக்களுக்கு லைக் கிடைக்க வேண்டும் என்பதற்காக விசித்திரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில வீடியோக்கள் வரவேற்பை பெற்றாலும், பல வீடியோக்கள் விமர்சனமாகின்றன.
அந்தவகையில், சில நாட்களுக்கு முன்பு இந்தியா கேட் பகுதியை சுற்றிப் பார்த்த ரஷியாவை சேர்ந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் நடனமாட வற்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்திய ரயில்வேயில் வெஸ்டர்ன் கழிப்பறை அசுத்தமாக இருப்பதாக வீடியோ ஒன்றை எடுத்து வெளிநாட்டை சேர்ந்த இரினா மோரேனோ என்பவர் வெளியிட்டுள்ளர்.
இவர், 52 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும், அமெரிக்கா, ருமேனியா மற்றும் கனடாவில் குடியுரிமை பெற்றுள்ளார்.
இவர், உதய்பூர் சிட்டி - ஜெய்ப்பூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் ரயிலில் 2-ம் வகுப்பில் பயணம் செய்துள்ளார். அப்போது ரயிலின் கழிப்பறை அசுத்தமாக இருப்பதாக வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பயனர் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பயனர் ஒருவர், "நீங்கள் இரண்டாம் வகுப்பில் பயணிக்கிறீர்கள். இது மலிவான படிவங்களில் ஒன்றாகும்" என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, முதல் வகுப்பு ரயிலின் மற்றொரு கழிவறை வீடியோவை இரினா வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |