ரயிலில் அசுத்தமான கழிப்பறை.., வழக்கு தொடர்ந்த பயணிக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு
ரயில் பயணத்தில் அசுத்தமான கழிப்பறையில் அவதிப்பட்ட பயணிக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வாடா செல்வதற்கு 55 வயது நபரான மூர்த்தியும் அவரது குடும்பத்தினரும் திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
இவர், ரயிலில் 4 ஏ.சி. டிக்கெட்டுகளை பதிவு செய்து பயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது இவரது ரயில் பெட்டியில் ஏர் கண்டிஷன் சரியாக வேலை செய்யவில்லை.
மேலும், கழிப்பறை அசுத்தமாகவும், தண்ணீர் வராமலும் இருந்துள்ளது. இதனால், சுகாதாரமற்ற முறையில் பயணம் செய்த நபர் துவ்வாடாவில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மூர்த்தி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, விசாகப்பட்டினத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மூர்த்தியின் குற்றச்சாட்டை ரயில்வே துறை மறுத்துள்ளது.
மேலும், பொய்யான குற்றச்சாட்டை மூர்த்தி கூறியுள்ளதாகவும், ரயில்வே வழங்கிய சேவைகளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தது.
இந்த புகாரை பெற்றுக்கொண்ட நீதிமன்றத்திற்கு, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பார்வையிடவில்லை என்றும் கழிப்பறைகளுக்கு நீர் தடைபட்டதைக் கண்டறிந்ததாகவும் தெரியவந்தது.
இதையடுத்து, திருப்பதியில் இருந்து துவ்வாடா செல்லும் போது ஏற்பட்ட சிரமத்திற்காக மூர்த்திக்கு 25,000 இழப்பீடு வழங்க ரெயில்வேக்கு உத்தரவிட்டது. மேலும், வழக்கு செலவிற்காக கூடுதலாக ரூ.5000 வழங்கவும் உத்தரவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |