குளிந்த நீரான ஐஸ் வாட்டரை குடிப்பதால் இவ்வளவு ஆபத்தா?
குளிர்ந்த தண்ணீரான ஐஸ் வாட்டரை பலரும் விரும்பி குடிப்பார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் வெளியில் எங் காவது சென்று விட்டு வீட்டிற்கு வந்தால் நம் கை பிரிட்ஜில் உள்ள ஐஸ் வாட்டரைத்தான் தேடும்.
குளிர்ந்த தண்ணீரை குடித்தால் வெயிலின் களைப்பு சட்டென காணாமல் போவதோடு, குளுமை நம்மை வருடும். ஆனால் ஐஸ் வாட் டரை குடிப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படு வதாக மருத்துவர் எச்சரிக்கிறரர்கள்.
உணவு சாப்பிட்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதய, சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உண வில் உள்ள எண்ணெய் துகள்கள், கொழுப்பு களில் இந்த குளிர்ந்த தண்ணீரால் அவை கெட்டியாகி ரத்த நாளங்களில் படிய வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தெர்டர்ந்து ஐஸ் வாட்டரை குடிப்பது புற்றுநோய்க்கும் வழி வகுக்கும். குளிர்ந்த தண்ணீரால் ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.
அதோடு கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் செய்கிறது. மேலும் நெஞ்சு எரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, வயிற்று வலி, பக்கவாதம், தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு ஏற்படும். இதை அல்வா மூலம் எளிதாக கண்டறியலாம்.
அல்வாவை எடுத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு அரைமணி நேரம் கழித்துப்பார்த்தால் அதிலிருந்த எண்ணெய் பசை காணாமல் போயிருக்கும். மேலும் கெட்டியாக மாறி இருக்கும். அதிலிருந்த எண்ணெய் ஆங்காங்கே படிந்து வெள்ளை நிறமாக இருக்கும்.
இது போன்றுதான் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும்போது உணவில் உள்ள எண்ணெய் துகள்களும், கொழுப்பும் கெட்டியாக மாறி விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.