ஜேர்மன் தரப்பிலிருந்து உக்ரைனுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி
பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும், புதிய பிரதமர், உக்ரைனுக்கு பிரித்தானியாவின் ஆதரவு தொடரும் என்று கூறியுள்ளார்.
ஆனால், சில நாடுகளிலிருந்து உக்ரைனுக்கு ஏமாற்றமளிக்கும் செய்திகள் கிடைத்துள்ளன.
உக்ரைனுக்கு ஏமாற்றமளிக்கும் சில செய்திகள்
அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதியான ட்ரம்ப் மீது கொலை முயற்சித் தாக்குதல் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
ட்ரம்ப் ஜனாதிபதியாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
ட்ரம்புக்கு அது நல்ல செய்தியானாலும், உக்ரைனுக்கு அது நல்ல செய்தி இல்லை என கருதப்படுகிறது.
காரணம், ட்ரம்ப் ஜனாதிபதியானால் உக்ரைனுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது.
ஜேர்மனி அளித்துள்ள ஏமாற்றம்
அத்துடன், உக்ரைனின் நெருங்கிய கூட்டாளரான ஜேர்மனியிலிருந்தும் உக்ரைனுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
ஆம், உக்ரைனுக்கு வழங்கு உதவியை பாதியாக குறைக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
ஜேர்மனியின் வரைவு பட்ஜெட்டில் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுவந்த நிதி உதவி, 8 பில்லியன் யூரோக்களிலிருந்து 4 பில்லியன் யூரோக்களாக குறைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
ஜேர்மனி, உக்ரைனுக்கு அதிக அளவில் நிதி உதவி செய்துவரும் இரண்டாவது நாடாகும். ஏற்கனவே அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியானால் அமெரிக்கா வழங்கும் நிதி குறைக்கப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம் என வெளியாகியுள்ள செய்தியால் உக்ரைனில் அச்சம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |