தங்களுக்காக ஆடம்பர செலவு செய்த கனேடிய இளைஞரை நம்பிய பெண்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்
தங்களுக்காக ஆடம்பர செலவு செய்த கனேடியர் ஒருவரை நம்பி பணம் கொடுத்த பெண்கள் பலர், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து பொலிசில் புகாரளித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கால்கரியைச் சேர்ந்த Bryan Christopher Syryda (36), கணினி முதலான மின்னணு பொருட்கள் தருவதாக பெண்களுக்கு வாக்களித்ததைத் தொடர்ந்து, அவருக்கு பணம் கொடுத்துள்ளார்கள் அவர்கள்.
அத்துடன், ஒன்லைனில் சந்தித்த பெண்களுக்காக ஆடம்பரமாக செலவு செய்துள்ளார் Bryan. ஆனால், அதற்காக அவர் செலவிட்ட பணம், ஏற்கனவே வேறு பல பெண்களிடம் மோசடி செய்து பெற்றது என்பது இந்தப் பெண்களுக்குத் தெரியாது!
இப்படி ஒருவர் தங்களுக்காக ஆடம்பரமாக செலவு செய்வதற்கு தயாராக இருக்கிறார் என்பதால் அவரை பல பெண்கள் நம்பியிருக்கிறார்கள். சொல்லப்போனால், சில பெண்கள் அவருடன் காதலிலும் விழுந்திருக்கிறார்கள். ஆகவே, அவர் அவர்களுக்கு மின்னணு பொருட்கள் தருவதாகக் கூறவே, அவரை நம்பி பணம் கொடுத்திருக்கிறார்கள் அந்தப் பெண்கள்.
அவரோ, அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு, சொன்னபடி மின்னணுப்பொருட்களையும் கொடுக்காமல் போகவே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண்கள் பொலிசில் புகாரளித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து Bryan கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏராளமான மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.