உள்நாட்டு யுத்தத்துக்குத் தப்பி கனடா வந்த பெண்... புலம்பெயர்தல் அலுவலகம் கொடுத்த ஏமாற்றம்
பணி அனுமதி பெற 16 மாதங்களாக புலம்பெயர்தல் அலுவலகத்துக்கு நடையாக நடந்தார் பெண்ணொருவர்.
ஆனால், அவருக்கு பணி அனுமதி கொடுக்கப்பட்ட அன்றே ஒரு அதிர்ச்சியையும் கொடுத்தது கனேடிய புலம்பெயர்தல் அலுவலகம்.
எத்தியோப்பியாவிலிருந்து உள்நாட்டு யுத்தத்துக்குத் தப்பி கனடாவுக்கு ஓடிவந்தார் Eden Zebene (23) என்ற இளம்பெண்.
அகதி நிலை கோரியிருந்த அவர், 16 மாதங்கள் காத்திருந்த நிலையில், புலம்பெயர்தல் அலுவலகம் செய்த ஒரு தவறால் வேலைக்கும் செல்ல முடியாமல், படிக்கவும் முடியாமல், மருத்துவ உதவியும் பெற முடியாமல் தவிக்கிறார்.
Buntola Nou/CBC
16 மாதங்கள் தனது தகுதி நேர்காணலுக்கான அழைப்புக்காக புலம்பெயர்தல் அலுவலகத்துக்கு நடையாக நடந்தார் Eden.
கடைசியாக, இந்த மாதம் அவருக்கு பணி அனுமதி கிடைத்தது. ஆனால், கூடவே ஒரு ஏமாற்றமும் காத்திருந்தது Edenக்கு...
ஆம், அவரது பணி அனுமதியில், காலாவதி திகதி ஆகத்து 6, 2022 என குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, அவருக்கு என்று பணி அனுமதி வழங்கப்பட்டதோ, அன்றே அது காலாவதியாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
Buntola Nou/CBC
தான் கடும் ஏமாற்றமடைந்ததாத தெரிவிக்கும் Eden, அவமானமாக உணர்வதாகவும், இந்த நாட்டில் தனக்காக கவலைப்பட யாரும் இல்லை என எண்ணியதாகவும் கண்ணீர் கொப்புளிக்கும் கண்களுடன் தெரிவிக்கிறார்.
எத்தியோப்பியாவில் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு, பாலியல் தாக்குதல்களுக்காளாக்கப்பட்டு, தனது வீடும் சொத்துக்களும் தீவைத்து எரிக்கப்பட்டதால் உயிர் தப்ப கனடாவுக்கு ஓடிவந்ததாக தெரிவிக்கிறார் Eden.
Submitted by Eden Zebene
கனடாவுக்கு தப்பி வந்து இப்போது பாதுகாப்பாக உணர்வதாக தெரிவிக்கும் Eden, கணினி அறிவியல் கற்கும் ஆசையுடன் தான் வந்ததாகவும், பகுதி நேரப் பணி செய்ய விரும்புவதாகவும், ஆனால், முறையான அனுமதி இல்லாததால் தன்னால் எதுவும் செய்ய இயலாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதாகவும் தெரிவிக்கிறார்.
மேலும், Eden தற்போது கர்ப்பமாக வேறு இருக்கிறார். ஆனால், மருத்துவ உதவி பெறுவதற்கான அனுமதியும் அவருக்கு இல்லாததால் அவதியுறுகிறார்.
Submitted by Eden Zebene
ஒருவரது தலைவிதியை தீர்மானிக்கும் பொறுப்பிலிருப்பவர்கள் இப்படியாக தவறு செய்வார்கள் என்கிறார் Edenஇன் கணவரான Tizazu Yamitu.
தன் மனைவி படும் அவஸ்தையைப் பார்க்க கஷ்டமாக இருப்பதாகத் தெரிவிக்கும் அவர், தனது மனைவிக்கான ஸ்பான்சர் விண்ணப்பத்தையாவது வேகமாக பரிசீலிக்குமாறு கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பைக் கோருகிறார்.
அப்படியாவது Edenக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கலாம் என்று நம்பி தவிப்புடன் காத்திருக்கிறார்கள் தம்பதியர்.