பித்தவெடிப்பால் அவஸ்தையா? அதனை போக்க இதோ அசத்தலான டிப்ஸ்!
cracked heel
By Kishanthini
பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு, பித்த வெடிப்பு என்று பெயர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், அசுத்தம் காரணமாகவும், இந்த வெடிப்புகள் ஏற்படுகின்றன. ஆண்களை விட பெண்களே பெரிதும் துன்பத்திற்கு ஆளாகின்றனர் .
இதற்கு ஒரு சில இயற்கை பொருட்கள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தால் பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்திய நன்னாரிவேரை 3, 4 தடவை கூட பயன்படுத்தலாம்.
- பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலையை அரைத்து பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.
- தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
- பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.
- மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
- வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.
- ஆலமரப்பால்,அரசமரப்பால் இரண்டும் சமஅளவு கலந்து பூசவும் வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வர பித்தவெடிப்பு குணமாகும் .
- வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
- இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
- குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US