கொரோனா தடுப்பூசி பெறாவிட்டால் பணிநீக்கம்... எச்சரிக்கை விடுத்துள்ள சுவிஸ் நிறுவனம்
கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என சுவிஸ் விமான நிறுவனம் எச்சரித்துள்ளது.
சுவிஸ் விமான நிறுவனமான SWISS, விமானத்தில் பணிபுரியும் பணியாளர்கள் முழுமையாக தடுப்பூசி பெறாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
அதாவது, விமானம் பறக்கும்போது அதில் பணிபுரியும் விமான ஊழியர்கள் அனைவரும் டிசம்பருக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என விமான நிறுவனம் விரும்புகிறது.
அதன் பொருள் என்னவென்றால், நவம்பர் மத்தியப்பகுதி வாக்கில் அவர்கள் அனைவரும் தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருக்கவேண்டும் என்பதாகும். அப்படி முழுமையாக தடுப்பூசி பெறவில்லை என்றால், அவர்கள் பணியை இழக்கும் அபாயம் உள்ளது.
இதுவரை 54 சதவிகித விமான நிறுவன ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.