கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையை ரூ 24,700 கோடிக்கு வாங்கி ரூ 2.2 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய நிறுவனம்
நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக் கிண்ணம் தொடரின் அனைத்து ஆட்டங்களையும் ஸ்மார்ட் போன்களில் இலவசமாக கண்டுகளிக்க அனுமதித்திருந்தது டிஸ்னி ஹாட்ஸ்டார்.
பெருந்தொகையை ஈட்ட
10 போட்டிகளில் தொடர் வெற்றியுடன் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் செயற்பாடும் பெருந்தொகையை ஈட்ட டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு உதவியுள்ளது.
இணையத்தில் கிரிக்கெட் ஆட்டங்களை ஒளிபரப்புவதில் ஒருகாலத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தது டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம். ஆனால் புதிய நிறுவனங்கள் இந்த சந்தையில் களம் கண்ட பின்னர் போட்டி வலுத்தது.
இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் வீழ்ச்சியை எதிர்கொண்டது டிஸ்னி ஹாட்ஸ்டார். ஆனால் தற்போது ரோகித் ஷர்மா, விராட் கோஹ்லி, ஷமி உள்ளிட்ட பலரின் சாதனைகளுடன் இந்திய அணியின் அபாரமான செயல்பாடுகள் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
தற்போது 167.68 பில்லியன் டொலர்
வெளியான தரவுகளின் அடிப்படையில் டிஸ்னி நிறுவனத்தின் சந்தை மதிப்பு இந்த உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடருடன் ரூ 2.2 லட்சம் கோடி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
டிஸ்னி நிறுவனத்தின் சந்தை மதிப்பு அக்டோபர் 4ம் திகதி 141.26 பில்லியன் டொலர் என இருந்தது. ஆனால் தற்போது 167.68 பில்லியன் டொலர் தொகையை எட்டியுள்ளது.
கிரிக்கெட் உலகக் கிண்ணம் தொடரும் டிஸ்னி நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்வுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. 2027 வரையில் இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் ஒளிபரப்பும் உரிமையை ரூ 24,789 கோடிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.
இந்தியா - நியூசிலாந்து உலகக் கிண்ணம் அரையிறுதி ஆட்டத்தை இணையமூடாக 5.3 கோடி பேர்கள் பார்வையிட்டுள்ளனர். இதுவே ஒரு கிரிக்கெட் போட்டிக்கு இணையமூடாக அதிகபட்ச பார்வையாளர்கள் எண்ணிக்கை என கூறப்படுகிறது.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |