ஆசிய கோப்பை, ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்ப டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் முடிவு
டிஸ்னி+ஹாட்ஸ்டார் நிறுவனம் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக நேரடியாக ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளது.
அதன் மொபைல் செயலியின் அனைத்து பயனர்களுக்கும் லைவ் ஸ்ட்ரீமிங் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு வந்த நிலைமை
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஐபிஎல் போட்டிகள் மற்றும் HBO உள்ளடக்கத்தை சந்தா அடிப்படையில் வழங்கியது. ஆனால், இடையில் ஜியோ சினிமாவின் நுழைந்து ஐபிஎல் போட்டிகள் இலவசமாக ஒளிபரப்பபியது.
இதன்காரணமாக, பார்வையாளர்களின் எண்ணிக்கையைத் தக்கவைக்க வரவிருக்கும் பெரிய நிகழ்வுகளை அதன் பயனர்களுக்கு இலவசமாக வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமை டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு வந்துவிட்டதாக பேசப்படுகிறது.
நிகழ்ச்சிகளை இலவசமாக வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் OTT இயங்குதளங்களில் ஒன்றாகும்.
ஆனால், ரிலையன்ஸ் ஜியோ தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் அனைத்து முக்கிய ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு எதிராக உள்ளது.
ஐபிஎல் மற்றும் எச்பிஓ உள்ளடக்கத்தைத் தவிர, ஜியோசினிமா சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் OTT-ன் வரவிருக்கும் சீசனின் ஸ்ட்ரீமிங்கை சமீபத்தில் அறிவித்தது. ஜியோசினிமா அனைத்து பயனர்களுக்கும் பிக் பாஸ் OTT இன் இலவச 24/7 ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2023 Asia Cup, ICC Men’s Cricket World Cup 2023, Disney+ Hotstar, Jio, Cricket Live Streaming