பாஸ்வேர்டு ஷேர் பண்றிங்களா? நெட்ஃபிக்ஸ் போலவே கட்டுப்பாடுகள் விதித்த ஹாட்ஸ்டார்
Netflix-க்குப் பிறகு, மற்றொரு ஸ்ட்ரீமிங் தளமான ஹாட்ஸ்டார் பாஸ்வேர்ட் பகிர்வுக்கான கட்டுப்பாடுகளுடன் வந்துள்ளது.
Disney Plus Hotstar இப்போது பிரீமியம் பயனர்களிடையே கடவுச்சொல் பகிர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரீமியம் பயனர்கள் நான்கு சாதனங்களில் இருந்து மட்டுமே உள்நுழைய அனுமதிக்கும் புதிய கொள்கையை நிறுவனம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, பயனர்கள் தங்கள் பிரீமியம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் கணக்கில் 10 சாதனங்களில் உள்நுழைய முடியும், அதை நிறுவனம் இப்போது நான்காகக் குறைத்துள்ளது.
மே மாதத்தில், டிஸ்னியின் முக்கிய ஸ்ட்ரீமிங் போட்டியாளரான Netflix, ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதேபோன்ற கொள்கையை அமல்படுத்தியது. Netflix சமீபத்தில் சந்தாதாரர்களிடம் தங்கள் வீட்டிற்கு வெளியே உள்ளவர்களுடன் சேவையைப் பகிர்ந்து கொள்ள கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியது.
டிஸ்னி, நெட்ஃபிக்ஸ், அமேசான் மற்றும் ஜியோசினிமா ஆகியவை இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளன. மீடியா பார்ட்னர்ஸ் ஏசியாவின் கூற்றுப்படி, இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சந்தை 2027-ஆம் ஆண்டில் 7 பில்லியன் டொலர் தொழில்துறையாக வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 50 மில்லியன் சந்தாதாரர்களுடன், பயனர்களின் அடிப்படையில் Hotstar சந்தையில் முன்னணியில் இருப்பதாக பல்வேறு தரவுகள் காட்டுகின்றன.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஜனவரி 2022 முதல் மார்ச் 2023 வரை 38% பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. போட்டியாளர்களான நெட்ஃபிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ வெறும் 5% பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Disney Plus Hotstar, Netflix, Disney+ Hotstar, Hotstar limit account sharing, Hotstar Password Share, password-sharing restrictions, Hotstar Password Sharing Limit