சிறுநீரக கல் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறனுமா? இந்த மூலிகைசாற்றை தொடர்ந்து குடிங்க!
பொதுவாக உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை வடிகட்டி, வெளியேற்றும் பணியைச் சிறுநீரகங்கள் செய்கின்றன.
சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள்படிவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன.
இந்தக் கற்கள்தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன. குறைந்த அளவு நீர் அருந்துதல், அதிக அளவு மாமிச உணவு உண்ணுதல், குளிர்பானங்கள் அருந்துதல், வைட்டமின் ‘ஏ’ குறைபாடு மற்றும் வெயில் காலத்தில் உடம்பிலுள்ள நீர் அதிகமாக வெளியேறுதல், சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள், சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைத்திருத்தல் போன்ற காரணங்களால் கற்கள் தோன்றலாம்.
இது சிலசமயங்களில் வலியை தரக்கூடியதாக அமைகின்றது. எனவே இவற்றை ஆரம்பத்திலே நீக்க முடியும். அதற்கு சில மூலிகைகள் உதவுகின்றது. அதில் ஒன்று தான் கொத்தமல்லி சாறு.
அந்தவகையில் தற்போது கொத்தமல்லியை எப்படி சிறுநீரக கற்களை கரைக்க பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
- ஒரு கப் அளவுள்ள கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பிறகு ஆறவைத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.
- பின்னர் சுத்தமான பாட்டிலில் ஊற்றி அதனை குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்க வேண்டும்.
- இதனை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நாளடைவில் சிறுநீரகத்தில் உள்ள கல் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறும்.
- இவ்வாறு தொடர்ந்து குடிக்கும்போது வித்தியாசத்தை நன்கு உணர முடியும்.