வங்கக்கடலில் மிரட்டும் டிட்வா புயல்.., நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டிட்வா புயலால் நாளை கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
இலங்கை கடலோரப் பகுதியில் டிட்வா புயல் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக இன்று நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழைக்கானரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இப்புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |