சென்னைக்கு அருகே கரையை கடக்கும் டிட்வா புயல்.., 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டிட்வா புயலால் இன்று 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
குமரிக் கடல், அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்வா பெயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஞாயிற்றுக்கிழமை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிட்வா புயல் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டையில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கான் ஆரஞ்சு எச்சரிக்கையையும் வானிலை மையம் விடுத்துள்ளது.
அதேநேரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புயல் எதிரொலியால் சென்னை, பாம்பன், நாகை, கடலூர், காரைக்கால், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
மேலும், வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டிட்வா புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |