தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல்.., தமிழக அரசு முழு முன்னெச்சரிக்கை
பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை
டிட்வா புயல் சென்னையின் தெற்கு பகுதியில் 520கிமீ தொலைவிலும், புதுச்சேரியின் தென்கிழக்கில் 420கிமீ தொலைவிலும் நிலைக்கொண்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இது, மேலும் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை மறுதினம் வடதமிழ்நாட்டை நெருங்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதனை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, உட்பட 14 மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண முகாம்களின் விவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்வதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கங்களில் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
#CycloneDitwah பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 28, 2025
16 #SDRF படைகளும் 12 #NDRF படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி… pic.twitter.com/rIyhxAbehj
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |