70 வயதில் விவாகரத்து.., மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புக்கொண்ட கணவர்
ஹரியானா மாநிலத்தில் 70 வயது தம்பதிக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜீவனாம்சமாக ரூ.3 கோடி
இந்திய மாநிலமான ஹரியானா, கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதினர் ஆகஸ்ட் 27, 1980 அன்று திருமணம் செய்து கொண்டனர். 70 வயதை கடந்த இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2006-ம் ஆண்டு மே 8-ம் திகதி முதல் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இதன்பின்னர், கர்னால் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கணவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு 2013 -ம் ஆண்டில் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
பின்னர், பஞ்சாப் அன்ட் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.
இந்நிலையில், இந்த மனு கடந்த மாதம் மத்தியஸ்தம் மற்றும் சமரச மையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு, இருவருக்கும் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர்.
இதையடுத்து, தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மனைவிக்கு ஒரு முறை ஜீவனாம்சமாக ரூ.3.07 கோடி வழங்க கணவர் ஒப்புக் கொண்டார்.
அதாவது, தனக்கு சொந்தமான நிலத்தை விற்று ரூ.2.16 கோடியும், பயிர் விற்பனை மூலம் ரூ.50 லட்சம் ரொக்கமும், ரூ.40 லட்சம் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களையும் மனைவிக்கு வழங்கினார்.
ஆனால், ஒரு முறை ஜீவனாம்சத்தைத் தவிர கணவரது சொத்தில் மனைவி மற்றும் பிள்ளைகள் உரிமை கோர முடியாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |