2 முறை விவகாரத்து செய்த பிரதமர் போரிஸ் திருமணம் எப்படி இங்கு நடந்தது? எழுந்தது புதிய சர்ச்சை
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தன்னுடைய காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நிலையில், இரண்டு முறை விவகாரத்தான நபருக்கு எப்படி தேவாலயத்தில் திருமணம் செய்து வைக்க முடியும் என்று பாதிரியார் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது காதலியான கேரி சைமண்ட்ஸ்க்கு வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள கதீட்ரலில் ரகசியமாக திருமணமாக நடந்தது. இந்த திருமணத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களின் திருமணத்தை, பிரதமர் அலுவலகமும் நேற்று காலை உறுதிப்படுத்தியது. அது தொடர்பான அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் கூட வெளியாகிவிட்டது.
இந்நிலையில், இரண்டு முறை விவாகரத்து செய்யப்பட்ட நபரை, அதாவது பிரதமர் போரிஸ் ஜோன்சனை தேவாலயத்தில் மறுமணம் செய்ய ஏன் அனுமதித்தீர்கள் என்று பாதிரியார்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிரதமர் போரிஸ் இதற்கு முன்பு Allegra Mostyn-Owen என்பவரை திருமணம் செய்து அவருடன் ஆறு ஆண்டு திருமண வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். அதே போன்று Marina Wheeler என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்து அவர்களை விவாகரத்து செய்த பின்னரே, இப்போது கேரி சைமண்ட்ஸை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பொதுவாக, விவாகரத்து செய்தவர்களின் முன்னாள் மனைவிகள் உயிருடன் இருந்தால் தேவாலயத்தில் மறுமணம் செய்ய சட்டம் இல்லை. இதை கத்தோலிக்க நித் சட்டமும் அனுமதிக்காது.
இந்நிலையில், கத்தோலிக்க பாதிரியார் Mark Drew தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இரண்டு முறை விவாகரத்து பெற்ற போரிஸ் ஜோன்சன் வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதை யாராவது எனக்கு விளக்க முடியுமா? தேவாலயத்தில் அது சாத்தியமில்லை என்று? கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏனெனில், இது போன்ற விவாகரத்து செய்யப்பட்டவர்கள் தேவாலயத்தில் மறுமணம் செய்ய அனுமதியில்லை என்று நிராகரிக்கப்பட்டுள்ளதை அவர் பார்த்த நிலையிலும், அவரும் இது போன்ற நிலையை மேற்கொண்டதன் விரக்தி காரணமாகவே இந்த கேள்வியை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.