விவாகரத்து பெற்ற பெண்கள் சுற்றுலா சென்று கொண்டாட்டம்.., வெளியான வீடியோ
விவாகரத்து பெற்ற பெண்களின் இன்ப சுற்றுலா வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுற்றுலா கொண்டாட்டம்
இந்திய மாநிலமான கேரள மாநிலத்தில் விவாகரத்து பெற்ற பெண்களின் சுற்றுலா வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விவாகரத்து பெற்ற பெண்கள் குழுவாக சேர்ந்து சுற்றுலா சென்று கொண்டாடியது தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ரபியா அபி என்ற பெண் விவாகரத்து பெற்ற பெண்களுக்காக குழு ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில், சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து பகிர்ந்துள்ளார்.
இதற்கு, மாநிலம் முழுவதும் உள்ள விவாகரத்து பெற்ற பெண்கள் சம்மதம் தெரிவித்து சுற்றுலா சென்று கொண்டாடியுள்ளனர். அங்கு அவர்கள் ஆடல், பாடல் என மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.
பின்னர், தனக்கு ஏன் விவாகரத்து ஆனது என்பது குறித்து மற்ற பெண் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
மேலும், இந்த பயணமானது தங்களுக்கு புதிய நம்பிக்கை, உறவுகளை உருவாக்கும் பயணமாக இருந்தது என்று சமூக வலைதளத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |