பிரித்தானியாவில் கொரோனா தாக்கிய ஆண்டில் குறைந்த விவாகரத்துகள்.. ONS தகவல்
பிரித்தானியாவில் கொரோனா தாக்கிய 2020 ஆம் ஆண்டில் விவாகரத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் ONS தெரிவித்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2020 ஆம் ஆண்டில் பிரட்டன் மற்றும் வேல்ஸில் 1,03,592 விவாகரத்துகள் நடந்ததாகக் காட்டுகின்றன.
இது 2019ல் வழங்கப்பட்ட விவாகரத்து எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 4.5% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப நீதிமன்றங்கள் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது போன்ற காரணிகள், முடிக்கப்பட்ட விவாகரத்துகளின் எண்ணிக்கை மற்றும் காலக்கெடுவைப் பாதித்திருக்கலாம்.
ஆனால் எந்த அளவிற்கு பாதித்திருக்குமு் என்று தெரிந்து கொள்வது கடினம் என ONS தெரிவித்துள்ளது.