அந்த ஒரே காரணம்... பிரித்தானியாவில் 1971க்குப் பிறகு சரிவடைந்த விவாகரத்து எண்ணிக்கை
பிரித்தானியாவில் 1971க்குப் பிறகு தற்போது விவாகரத்து எண்ணிக்கை மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
80,057 தம்பதிகள் விவாகரத்து
விலைவாசி உயர்வு காரணமாகவே விவாகரத்துகள் குறைந்துள்ளதாக சட்டத்தரணிகள் தரப்பு தெரிவிக்கின்றனர். 2022ல் மட்டும் சட்டப்பூர்வமாக 80,057 தம்பதிகள் விவாகரத்து பெற்றுள்ளனர்.
ஆனால் 2021 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இது 30 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தனித்து இயங்குவது என்பது அதிக செலவு என்பதாலையே, விவாகரத்து பெறுவதை மக்கள் தள்ளிப்போடுவதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
காப்பீட்டாளர்கள் அவிவா தரப்பில் குறிப்பிடுகையில், விவாகரத்துக்கான சராசரி செலவு என்பது சுமார் 14,500 பவுண்டுகள் என்றும், இதில் சட்டத்தரணிகளுக்கான சம்பளம் மற்றும் நீதிமன்றத்திற்கான கட்டணம் ஆகிய உட்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, பிரிந்து செல்லும் தம்பதிகள் சொந்தமாக குடியிருப்பு வசதிகளை தனியாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாலையே, சேர்ந்து வாழ விரும்பாத தம்பதிகளும் ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
20 வாரங்கள் காத்திருக்க வேண்டும்
பலர் தங்கள் வாழ்க்கை தொடர்பில் முக்கிய முடிவெடுக்க தயங்குவதற்கு காரணம் பொருளாதார பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகும் என்பதாலையே என சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் பொருளாதார சவால்களே மக்களை விவாகரத்தில் இருந்து காப்பாற்றி வருவதாக இன்னொரு சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். வருவாய் தொடர்பான அழுத்தமே 19 சதவீத விவாகரத்துகளை தாமதப்படுத்தியதாக சட்ட அமைப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
குடும்ப நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளும் விவாகரத்து எண்ணிக்கை சரிவடைய ஒரு காரணம் என தேசிய புள்ளியியல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், புதிதாக விவாகரத்து பெறுவதென்றால் குறைந்தபட்சம் 20 வாரங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலையும் காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |