பணத்திற்காக இப்படி செய்கிறார்கள்! நடிகர் சத்யராஜ் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு
தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் பண வசூலித்து மோசடி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
திவ்யா சத்யராஜ்
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா 'மகிழ்மதி' எனும் இயக்கத்தை நடத்தி வருகிறார். ஊட்டச்சத்து நிபுணரான இவர், வறுமையில் இருக்கும் நபர்களுக்கு சத்தான உணவு கிடைக்க இதனை செய்கிறார்.
சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் திவ்யா சத்யராஜ் போட்டியிட வேண்டும் என, பாஜக அழைப்பு விடுத்ததாக வெளியான தகவல்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகள் மீது திவ்யா சத்யராஜ் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பரபரப்பு குற்றச்சாட்டு
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'சில தனியார் மருத்துவமனைகளில் லாபம் வருவதற்காக, நோயாளிகளிடம் தேவையில்லாத இரத்த பரிசோதனை, தேவையில்லாத MRI, தேவையில்லாத ஸ்கேன் இதெல்லாம் பண்ண வைக்கிறாங்க. ஒரு நோயாளி குணமான பின்னரும் 2 நாட்கள் மருத்துவமனையிலேயே அட்மிட் பண்ணினத்துக்கு அப்புறம் டிஸ்சார்ஜ் செய்கிறார்கள்.
தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை விட, பணம் காலியாகும் என்ற பயம் தான் நோயாளிகளிடம் அதிகமாக இருக்கிறது. எங்க அமைப்பு மூலமாக சிலருக்கு உதவி செய்தாலும், எல்லாருக்கும் உதவ முடியாத நிலை உள்ளது.
நோயாளிகள் வருவாய் உருவாக்கும் இயந்திரங்கள் கிடையாது. தனியார் மருத்துவமனைகள் வைத்திருப்பவர்கள் நோயாளிகளை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |