மக்களை அடித்துக் கொல்லக் கூடாது! ரசிகரை கொலை செய்த வழக்கில் மாஸ் ஹீரோ - தமிழ்ப்பட நடிகை கருத்து
ரசிகர் கொல்லப்பட்ட வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டது குறித்து தமிழ்ப்பட நடிகை திவ்யா ஸ்பந்தனா கருத்து தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில் பிரபல நடிகரான தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா கவுடா ரசிகர் ரேணுகாசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன் சேர்த்து 12 பேரை பொலிஸார் கைது செய்தது கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நடிகை ரம்யா ஸ்பந்தனா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில்,
''யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை. யாரும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. நீங்கள் மக்களை அடித்துக் கொல்லக் கூடாது. நீதி வழங்கப்படுமா இல்லையா என்பதை நீங்கள் நம்பினாலும் ஒரு எளிய புகார் போதுமானதாக இருக்கும்'' என கூறினார்.
மேலும் அவர், ''சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது. ரேணுகா சுவாமிக்கு நீதி கிடைக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், சட்டம் மற்றும் நீதியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்'' என கருத்து தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |