Zepto-வில் ஒரு மணிநேரத்தில் 14,000 தங்க, வெள்ளி நாணயங்கள் டெலிவரி
Diwali 2026: Gold Coin Orders Boom on Quick Apps: Zepto, Instamart போன்ற விரைவான வர்த்தக தளங்களில் ஒரு மணிநேரத்தில் 14,000 தங்க, வெள்ளி நாணயங்கள் டெலிவரி செய்யப்பட்டு புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது.
Quick Commerce தளங்கள்
இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை காலத்தில் இந்தியர்களின் ஷாப்பிங் முறை கணிசமாக மாறியுள்ளது. வழக்கமாக நகைக்கடைகள் மற்றும் சந்தைகளில் வாங்கப்பட்ட தங்க, வெள்ளி நாணயங்கள் தற்போது Quick Commerce தளங்கள் மூலம் சில நிமிடங்களிலேயே வீட்டிற்கு வந்து சேர்கின்றன. இந்த மாற்றம் இந்தியாவின் ஆன்லைன் வணிகத் துறையில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

14,000 தங்க, வெள்ளி நாணயங்கள் டெலிவரி
Zepto நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் CEO ஆதித் பலிச்சா தெரிவித்ததாவது, தன்தேரஸ் உச்ச நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 14,000-க்கும் அதிகமான தங்க மற்றும் வெள்ளி நாணயங்களை நிறுவனம் டெலிவரி செய்துள்ளது.
மேலும், நிமிடத்திற்கு சுமார் 298 நாணயங்கள் விற்பனையானதாகவும் கூறப்பட்டுள்ளது. பண்டிகைக்கான பாரம்பரிய பொருட்களான கோலப் பொடிகள், திரி, விளக்குகள், ஸ்டீல் பாத்திரங்கள் மற்றும் துடைப்பங்கள் ஆகியவற்றின் விற்பனையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதேபோல், ஆண்களுக்கான குர்தா ஆடைகளின் விற்பனையும் ஐந்து மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.
Swiggy Instamart-லும் தங்க நாணயங்களுக்கான தேவை மிக வேகமாக உயர்ந்துள்ளது. தன்தேரஸுக்கு முந்தைய வாரத்தில் தங்க நாணய ஆர்டர்கள் 23 மடங்கும், வெள்ளி நாணய ஆர்டர்கள் 7 மடங்கும் உயர்ந்தன. சில வாடிக்கையாளர்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான தங்க நாணயங்களை ஒரே ஆர்டரில் வாங்கியுள்ளனர்.
Flipkart Minutes தளமும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை மூன்று மடங்கு அதிக ஆர்டர்களைப் பதிவு செய்துள்ளது. தீபங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், தங்க நாணயங்கள், சமையலறை சாதனங்கள் மற்றும் பூஜைப் பொருட்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இனிப்புகள், மலர்கள், பரிசுப் பொருட்கள், காலணிகள் மற்றும் ஆடைகளுக்கான தேவை கூட அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் மற்றும் சர்க்கரை குறைந்த இனிப்புகளின் விற்பனையும் வேகமாக வளர்ந்துள்ளது.
மற்றொரு முக்கிய அம்சம் என்னவெனில், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கூட மக்கள் அதிகளவில் ஆர்டர்கள் செய்துள்ளனர். இதன் மூலம், பண்டிகை ஷாப்பிங் இனி கடைகளில் மட்டுமல்லாமல், மொபைல் செயலிகளிலும் முழுமையாக இடம்பிடித்திருப்பது தெளிவாகிறது.
ரூ.1 கோடியில் உருவான இராவணன் சிம்மாசனம்: 24 காரட் தங்க அலங்காரம் - ராமாயணம் படக்குழுவின் பிரம்மாண்ட சாதனை
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |