அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.., வெளியான உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து, புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தீபாவளி போனஸ் அறிவிப்பு
2026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு முன்பணமும், போனஸும் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இதையொட்டி புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசின் சி மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் நடைமுறையைப் பின்பற்றி, புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்பட உள்ளது.
இதன்படி, தகுதியுடைய சி பிரிவு மற்றும் Non-Gazetted பி பிரிவு ஊழியர்களுக்கு 30 நாட்களுக்கான ஊதியத்திற்கு இணையான போனஸ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
2026 மார்ச் 31ஆம் தேதி பணியில் இருந்த ஊழியர்கள் இதற்கு தகுதி பெறுவார்கள். மேலும், 2025-26 நிதியாண்டில் குறைந்தது 6 மாதங்கள் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும்.
போனஸ் கணக்கிடுவதற்கான மாத ஊதிய உச்சவரம்பு ரூ.7,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தகுதியான ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.6,908 தீபாவளி போனஸ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |