தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரூ.441 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
Diwali festival liquor sales 441 crore in tn- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 2 நாட்களில் ரூ.441.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ரூ.441.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமை (நவ.7) ஒரே நாளில் ரூ.234.75 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை (நவ.8) ரூ.206.63 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

இதன் மூலம், இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.441.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மண்டல வாரியாகப் பார்க்கும்போது, திருச்சி மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.98.97 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
அதேபோல், சென்னை மண்டலத்தில் ரூ.95.85 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.88.38 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.87.52 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.70.66 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.