தீபாவளிக்கு 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.700 மதிப்பிலான மளிகைத் தொகுப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.700 மதிப்பிலான சிறப்புத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
தீபாவளிக்கு மளிகை தொகுப்பு
நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 8ஆம் திகதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் ரூ. 700 மதிப்புள்ள மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
இதில் 5 வகையான மளிகைப் பொருட்கள் இடம்பெறும் என்று குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.

இந்தத் தொகுப்பில் 2 லிட்டர் சமையல் எண்ணெய், 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ கடலைப் பருப்பு, அரை கிலோ ரவை, அரை கிலோ மைதா ஆகியவை வழங்கப்பட உள்ளன.
இந்தப் பொருட்கள் தீபாவளிக்கு முன்பாக ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும்.
மேலும், புதுச்சேரியில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இலவச அரிசி விநியோகம், இன்னும் ஒரு மாதத்திற்குள் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |