இந்த 4 பொருள் போதும்..! சுவையான தீபாவளி ஸ்பெஷல் மைசூர் பாக் தயார்
பொதுவாகவே அனைவருக்கும் இனிப்பு பலகாரம் என்றால் விருப்பம். அதிலும் தற்போது தீபாவளி வரவிருப்பதால் பலரது வீட்டிலும் இனிப்பு பண்டங்கள் செய்வதுண்டு.
அந்தவகையில் இலகுவான முறையில் எப்படி நெய் மைசூர் பாக் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு - 1 கப் (250 மில்லி கப்)
- நெய் - 150 மில்லி
- தண்ணீர் - 1/4 கப்
- சர்க்கரை - 1 கப் (250 மில்லி கப்)
செய்முறை
1. ஒரு பானில் கடலை மாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைந்த தீயில் 10 நிமிடம் வறுக்கவும்.
2. வறுத்த கடலை மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் சலித்து தனியாக வைக்கவும்.
3. அடுத்து நெய்யை உருக்கி, உருக்கிய நெய்யில் பாதியை சலித்த கடலை மாவில் ஊற்றி கட்டியின்றி கலக்கவும்.
4. மைசூர் பாக் செய்யும் தட்டின் எல்லாப் பக்கங்களிலும் நெய் தடவி வைக்கவும்.
5. ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து கரைக்கவும்.
6. சர்க்கரை கரைந்தவுடன் கடலை மாவு மற்றும் நெய் கலவையை ஊற்றி குறைந்த தீயில் கலக்கவும்.
7. சிறிது கெட்டியானதும் படிப்படியாக நெய்யை சேர்த்து, தொடர்ந்து கலந்து கொண்டே 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
8. பின்பு மைசூர் பாக் திரண்டு வந்ததும் நெய் தடவிய தட்டிற்கு மாற்றவும். மேலே நெய் தடவி 2 மணி நேரம் ஆற விடவும்.
9. ஆறியவுடன் டின்னில் இருந்து எடுத்து விரும்பிய வடிவில் வெட்டி நெய் மைசூர் பாக்கை பரிமாறவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |