தீபாவளி ஸ்பெஷல் மொறுமொறு ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
பொதுவாகவே அனைவருக்கும் இனிப்பு பலகாரம் என்றால் விருப்பம். அதிலும் தற்போது தீபாவளி வரவிருப்பதால் பலரது வீட்டிலும் இனிப்பு பண்டங்கள் செய்வதுண்டு.
அந்தவகையில் இலகுவான முறையில் எப்படி ரிப்பன் பக்கோடா செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- பொட்டு கடலை - 1/2 கப்
- அரிசி மாவு - 1 1/2 கப்
- கடலை மாவு - 1/2 கப்
- உப்பு - 1 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
- உருக்கிய வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- தண்ணீர்
- எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
1. மிக்ஸி ஜாரில் பொட்டு கடலையை சேர்த்து நன்கு அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
2. பின்பு சல்லடையில் அரைத்த பொட்டு கடலை மாவு, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து சலித்து கொள்ளவும்.
3. பிறகு உருக்கிய வெண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.
4. பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
5. பிறகு முறுக்கு அச்சில் ரிப்பன் பக்கோடா அச்சை வைக்கவும். பின்பு முறுக்கு அச்சின் உள் பக்கம் எண்ணெய் தடவவும்.
6. பிறகு தயார் செய்த மாவை அச்சில் சேர்க்கவும்.
7. கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அச்சில் இருந்து மாவை எண்ணெயில் பிழிந்துவிடவும்.
8. பிறகு பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து ஆறவிடவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |