தீபாவளி ஸ்பெஷல்: புளி பொங்கல் செய்வது எப்படி?
பொதுவாகவே அனைவரும் பொங்கல் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் இனிப்பான பொங்கல் தான் பெரும்பாலனவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆனால் தற்போது புளிப்பு சுவையுடன் எப்படி புளி பொங்கல் செய்து சாப்பிடலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 1 கப்
- பாசி பருப்பு - 3/4 கப்
- தண்ணீர்
- முழு தனியா - 2 மேசைக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 2
- மிளகு
- சீரகம் இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
- மஞ்சள் தூள்
- பெருங்காயத்தூள்
- புளி தண்ணீர் - 1/4 கப்
- உப்பு
- நெய்
- கடுகு
- கறிவேப்பிலை
செய்முறை
1. முதலில் அரிசி பருப்பு இரண்டையும் தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி ஊறவைக்கவும்.
2. மசாலா தூள் அரைக்க முழு தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒரு கடாயில் சேர்த்து வறுத்து நன்கு ஆறவிடவும்.
3. ஆறிய பிறகு தூளாக அரைத்து கொள்ளவும்.
4. குக்கரில் ஊறவைத்த அரிசி பருப்பு, தண்ணீர், இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள், நெய் சேர்த்து நன்கு கலந்து விட்டு மிதமான தீயில் 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
5. அடுத்து வேகவைத்த அரிசி பருப்புடன் புளி தண்ணீர் மற்றும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.
6. பிறகு உப்பு, அரைத்த மசாலா தூள் சேர்த்து கலந்து விடவும்.
7. பின்பு நெய் சேர்த்து இறக்கி வைக்கவும்.
8. தாளிப்பு கரண்டியில் நெய், கடுகு, சீரகம், மிளகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு பொங்கலில் சேர்க்கவும்.
9. தாளிப்பு கரண்டியில் நெய் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து பொங்கலுடன் சேர்த்து கலந்து விடவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |