தீபாவளி ஸ்பெஷல் அவல் லட்டு செய்வது எப்படி?
பொதுவாகவே அனைவருக்கும் இனிப்பு பலகாரம் என்றால் விருப்பம். அதிலும் தற்போது தீபாவளி வரவிருப்பதால் பலரது வீட்டிலும் இனிப்பு பண்டங்கள் செய்வதுண்டு.
அந்தவகையில் இலகுவான முறையில் எப்படி அவல் லட்டு செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை - 1/4 கப்
- பொட்டு கடலை - 1/4 கப்
- அவல் - 1 கப் (250 மி.லி கப்)
- நெய்
- முந்திரி
- திராட்சை
- தண்ணீர் - 3/4 கப்
- வெல்லம் - 3/4 கப்
- துருவிய தேங்காய் - 1/2 கப்
- ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை
1. முதலில் கடாயில் நிலக்கடலையை போட்டு இரண்டு நிமிடம் வறுத்து, பொட்டு கடலை சேர்த்து கலந்து விடவும். பின்னர் அவல் சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்.
2. இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஒரு தட்டில் எடுத்து போடவும்.
3. பிறகு அதே கடாயில் சிறிது நெய், முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
4. வெல்ல பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து வெல்லம் உருகியதும் அடுப்பை அணைத்து தனியாக வைக்கவும்.
5. வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
6. பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெல்ல பாகு, துருவிய தேங்காய், வேர்க்கடலை அவல் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
7. கலவையை நன்கு கலந்து, வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் இரண்டு மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.
8. பிறகு அடுப்பை அணைத்து விட்டு கலவையை ஒரு தட்டில் வைத்து முழுமையாக ஆற வைக்கவும்.
9. கலவை ஆறிய பிறகு அதில் சிறிது எடுத்து லட்டுவாக பிடிக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |