டேவிட் வார்னர் மகள்களுடன் இணைந்து அன்பு தீபாவளி வாழ்த்து
அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான டேவிட் வார்னர், தனது மகள்களுடன் சேர்ந்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர், இந்தியாவின் மீதான தீராத அன்பு கொண்டவர்.
37 வயதாகும் வார்னர் இதுவரை டெஸ்டில் 8487 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 6896 ஓட்டங்களும், டி20 போட்டிகளில் 2894 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய போது இந்திய மக்களின் அன்பை பெற்றார், இவருக்கு கிடைத்த வரவேற்பினால் திக்குமுக்காடிப் போனார் வார்னர்.
இதற்கு பரிசாக தன்னுடைய மகளுக்கு இன்டி-ரே என பெயர் சூட்டியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வார்னர் இந்திய பாடல்களுக்கு ரீல்ஸ்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் தீபாவளி நாளான இன்று தன்னுடைய மகள்களுடன் இணைந்து வாழ்த்துகளை கூறியுள்ளார்.
அதில், அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், இங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது, இதற்கு நன்றி, எப்போதும் பிடித்தவருடன் தொடர்பில் இருங்கள், இந்த தீபாவளி உங்களுக்கு மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் தரட்டும், நேர்மறையானவற்றை பரப்புவோம் என தெரிவித்துள்ளார்.