சருமத்தை பளபளப்பாக வைக்க வேண்டுமா? அப்போ விட்டமின் ஈ மாத்திரையை இப்படி பயன்படுத்துங்க!
விட்டமின் ஈ மாத்திரை சருமத்திற்கு மிக சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது.. விட்டமின் ஈ சருமத்தில் ஏற்படுகின்ற முதுமைத் தோற்றம், தோல் சுருக்கங்கள், தோலின் நெகிழ்வுத் தன்மை வரை பராமரிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி நம் உடல் செல்களை பாதிக்கும் ஆக்ஸினேற்ற அழுத்தத்தை தடுத்து நிறுத்துகிறது.
விட்டமின் ஈ நம் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது. கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதிலும் நம்முடைய சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்க விட்டமின் ஈ சீரம் பயன்படுகிறது.
விட்டமின் ஈ சீரத்தில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இவை நம்முடைய சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் வைக்கும். இந்த சீரத்தை எப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம் என அறிவோம்.
தேவையான பொருட்கள்
- விட்டமின் ஈ மாத்திரைகள் -2
- கிளிசரின் - 1 டேபிள் ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் - 2 டேபிள் ஸ்பூன்
- கற்றாழை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்
- கண்ணாடி பாட்டில் - 1
தயாரிக்கும் முறை
ஒரு பெளலை எடுத்து அதில் ரோஸ் வாட்டர், கற்றாழை ஜெல் இரண்டையும் ஒன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளுங்கள்.
நன்றாக கலந்த பிறகு அதில் விட்டமின் ஈ மாத்திரையை நசுக்கி அதன் பவுடரை சேருங்கள். பிறகு அதை நன்றாக கலக்கவும். பிறகு அதனுடன் கிளிசரினை சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு இந்த சீரத்தை பிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இரவு நேரங்களில் இந்த சீரத்தை பயன்படுத்துவதாக இருந்தால் முதலில் உங்க முகத்தை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு சீரத்தை உங்க கை விரல்கள் அல்லது உள்ளங்கையில் எடுத்து அதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.
ரொம்ப அழுத்தி தேய்க்க வேண்டாம். ஏனெனில் விட்டமின் ஈ சத்தை சருமம் தானாகவே உறிஞ்சி கொள்ளும். இதுவே நீங்கள் பகல் நேரத்தில் விட்டமின் ஈ சீரத்தை பயன்படுத்தினால் சீரம் போட்ட பிறகு சன்ஸ்க்ரீன் பயன்படுத்த மறந்து விடாதீர்கள். இதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.