தலைமறைவாகும் நிலை உருவாகலாம்... பிரித்தானிய இளவரசி யூஜீனிக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை
இளவரசர் ஹரி எழுதியுள்ள புத்தகம் தொடர்பான விடயங்களில் தலையிட்டால், மக்கள் கண்களில் படாதவாறு தலைமறைவாக வாழ வேண்டிய சூழல் உருவாகலாம் என இளவரசி யூஜீனியை எச்சரித்துள்ளார் ராஜ குடும்ப விமர்சகர் ஒருவர்.
இளவரசர் ஹரி, ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக புத்தகங்கள் எழுதி வருகிறார்.
அவற்றில் ஒரு புத்தகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. அது ராஜ குடும்பத்தினர் குறித்த முக்கிய விடயங்களை வெளிப்படுத்த இருப்பதால், அது தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல இருப்பதாக விமர்சித்துள்ளார் அந்த நிபுணர்.
அந்த புத்தகம் எழுதுவதற்கு இளவரசி யூஜீனியும் உதவி வருவதால், அது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.
யூஜீனி ஆபத்துடன் விளையாடுவதாக தெரிவிக்கும் அந்த நிபுணர், அந்த புத்தகம் ஏற்படுத்த இருக்கும் தாக்கத்தால் இளவரசி யூஜீனி பொதுமக்கள் கண்ணில் படாமல் தலைமறைவாக வாழும் ஒரு சூழல் கூட உருவாகலாம் என எச்சரிக்கிறார்.