வெற்றிக்கு பின் வயலின் வாசித்த ஜோகோவிச்: புன்னகைத்த மகள் தாரா..வைரல் வீடியோ
விம்பிள்டன் போட்டியில் வெற்றிக்கு பின் வயலின் வாசிப்பது போல் ஜோகோவிச் செய்த பாவனை இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜோகோவிச்
லண்டனில் விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடர் தொடங்கியுள்ளது. நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் செர்பிய நட்சத்திரம் ஜோகோவிச் மற்றும் சீன வீரர் வு யிபிங் இருவரும் மோதினர்.
Novak Djokovic's kids stayed up past their bedtime but the support made ALL the difference to dad 🫶
— Stan Sport (@StanSportAU) June 29, 2026
↳ Wimbledon. Every Match. Live & On Demand. Centre Court in 4K.#StanSportAU #Wimbledon pic.twitter.com/C4ILtQMkge
இப்போட்டியில் ஜோகோவிச் (Djokovic) 6-4, 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
அப்போது அவர் தனது வழக்கமான 'வயலின் வாசிக்கும்' பாவனையை டென்னிஸ் ராக்கெட் மூலம் வெளிப்படுத்தினார்.
வெட்கத்துடன் புன்னகைத்த மகள்
அதனைப் பார்த்து அவரது மகள் தாரா வெட்கத்துடன் புன்னகைத்தார். தன் மகள் இசை பயில்வதற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
தற்போது இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |