நோவக் ஜோகோவிச்சுக்கு கொரோனா: விசா ரத்தானதற்கு இதுதான் காரணமா?
உலகின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் என்ற விதிமுறை உள்ளது.
எனினும் உலகின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக் கொண்டாரா? இல்லையா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இதனால் அவர் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல்கள் நீடித்து வந்தது, இதற்கிடையே தடுப்பூசி விவகாரத்தில் தனக்கு விதிவிலக்கு இருப்பதாகவும், ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாகவும் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
மேலும் கடந்த புதனன்று இரவு மெல்போர்ன் விமான நிலையம் வந்தடைந்த நிலையில், அவரது விசா ரத்து செய்யப்பட்டது.
Happy New Year! Wishing you all health, love & joy in every moment & may you feel love & respect towards all beings on this wonderful planet.
— Novak Djokovic (@DjokerNole) January 4, 2022
I’ve spent fantastic quality time with loved ones over break & today I’m heading Down Under with an exemption permission. Let’s go 2022! pic.twitter.com/e688iSO2d4
ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய தேவையான பூர்த்தி செய்த ஆதாரங்களை வழங்க தவறியதால் ஜோகோவிச் விசா ரத்துச் செய்யப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனாவிலிருந்து மீண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் குறைந்தது 6 மாத காலத்துக்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், கடந்தாண்டு டிசம்பர் 16ம் தேதி நோவக் ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஜோகோவிச்சுக்கு ஆதரவாக செர்பிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Happening Now: A protest in Belgrade, Serbia, in support of letting unvaccinated Novak Djokovic play in the Australian Open. pic.twitter.com/qGrrlRZFkE
— The Recount (@therecount) January 7, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022