வாயை மூடிக்கொண்டு மரியாதையை கொடுங்கள்! பிரித்தானிய ரசிகர்களை கண்டித்த ஜோகோவிச்சின் வீடியோ வைரல்
பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் பிரித்தானிய ரசிகர்களைப் பார்த்து வாயை மூடுங்கள், வீரர்களுக்கு மரியாதை கொடுங்கள் என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டேவிஸ் கோப்பை
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், செர்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் (Novak Djokovic) மற்றும் பிரித்தானிய வீரர் கேமரூன் நோரி (Cameron Norrie) மோதினர்.
இதில் ஜோகோவிச் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தப் போட்டியில் ஜோகோவிச் விளையாடும்போது பிரித்தானிய ரசிகர்கள் வாத்தியாயங்களை இசைத்து அவரை வெறுப்பேற்றினர்.
Drama. ?
— Olly ??? (@Olly_Tennis_) November 23, 2023
? The Team GB section was playing drums during Djokovic’s interview, after knocking Great Britain out of the Davis Cup:
Novak replied: "Learn how to respect players, learn how to respect people, you shut up, you be quiet." pic.twitter.com/SNNsCcxtSn
போட்டி முடிந்ததும் செய்தியாளரிடம் பேசிக்கொண்டிருந்த ஜோகோவிச், அப்போது கூச்சலிட்ட பிரித்தானிய ரசிகர்களை நோக்கி 'வாயை மூடுங்கள், அமைதியாக இருங்கள். வீரர்களை மதியுங்கள்' என்று கோபமாக கூறினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அவமரியாதை
மேலும் இதுகுறித்து பேசிய ஜோகோவிச், ''முழுப் போட்டியிலும் அவமரியாதை இருந்தது. ஆனால் டேவிஸ் கோப்பையில் நான் தயாராக இருக்க வேண்டிய ஒன்று. ரசிகர்கள் எல்லை மீறி நுழைவது இயல்பானது.
நீங்கள் எதிர்வினையாற்றும் தருணத்தில், இதுபோன்ற நடத்தையை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என்று ஒரு வழியில் காட்டுகிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் நான் அதற்கு பதில் அளிக்க போகிறேன்'' என கூறியுள்ளார்.
Reuters
Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |