400 வாரங்களாக முதலிடம்! 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்
செர்பிய வீரரான நுவாக் ஜோகோவிச் ATP சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தார்.
ATP finals title
இத்தாலியில் ATP finals title எனும் ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. தரவரிசையில் முதல் 8 இடங்கள் மட்டுமே வகிக்கும் வீரர்கள் இதில் கலந்துகொண்டனர்.
Antonio Calanni - staff, ASSOCIATED PRESS
இறுதிப்போட்டியில் செர்பியா நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச்சும், இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னரும் (Jannik Sinner) மோதினர்.
Clive Brunskill/Getty Images
பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் 7வது முறையாக ATP சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
400 வாரங்களாக முதலிடம்
அத்துடன் ரோஜர் பெடரரின் (Roger Federer) சாதனையையும் அவர் முறியடித்தார். அத்துடன் தரவரிசையில் 400 வாரங்கள் நீடித்து சாதனை படைத்துள்ளார் ஜோகோவிச்.
இதற்கு முன்பு ஜேர்மனியின் ஸ்டெஃபி கிராஃப் (Steffi Graf) 377 வாரங்கள் முதலிடத்தில் இருந்தார். இதுகுறித்து ஜோகோவிச் கூறுகையில்,
'இது ஒரு நல்ல சாதனை, 400 வாரங்கள் நம்பர் 1யில். வரலாற்றில் இது ஒருபோதும் செய்யப்படவில்லை. யாரோ ஒருவர் இறுதியில் அதை உடைப்பார்கள், ஆனால் இது நீண்ட காலம் இருக்கும் என்று நம்புகிறேன்' என தெரிவித்தார்.
Antonio Calanni - staff, ASSOCIATED PRESS
Alessandro di Marco, EPA-EFE
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |