தல தோனி பீஸ்ட் விஜய் மாதிரி.. நடந்து வந்தா அதிரும்! தினேஷ் கார்த்திக்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி நடந்து வந்தால் மைதானமே அதிரும் என பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கடந்த 4ஆம் திகதி நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது.
பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக் 17 பந்துகளில் 26 ஓட்டங்கள் விளாசினார். போட்டி முடிந்த பின்னர் அவர் தோனி குறித்து பேசினார்.
தினேஷ் கார்த்திக் கூறும்போது, 'தல தோனிக்கு இருக்கிற ரசிகர்கள் கூட்டம் மிகப்பெரியது. அவர் நடந்து வரும்போது பீஸ்ட் விஜய் மாதிரி மைதானமே அதிரும். CSK அணிக்கு ரசிகர்கள் மிக அதிகம்' என தெரிவித்துள்ளார்.