10 பந்தில் கதையை முடித்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்! ருத்ரதாண்டவமாடிய கோலி..RCB முதல் வெற்றி
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
ஷிகர் தவான் 45
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் RCB அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் ஷிகர் தவான் 45 (37) ஓட்டங்களும், ஜிதேஷ் ஷர்மா 27 ஓட்டங்களும் எடுத்தனர்.
Athletic Anuj!
— IndianPremierLeague (@IPL) March 25, 2024
A sharp catch behind the stumps from @RCBTweets wicketkeeper-batter as #PBKS reach 154/6 with 8 balls to go
Head to @JioCinema and @StarSportsIndia to watch the match LIVE#TATAIPL | #RCBvPBKS pic.twitter.com/3snw3syupr
அதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணியில் பாப் டு பிளெஸ்ஸிஸ் (3), கிரீன் (3), மேக்ஸ்வெல் (3) சொற்ப ஓட்டங்களில் நடையைக் கட்டினர்.
விராட் கோலி அரைசதம்
ஆனாலும் அதிரடியாகவும், பொறுப்புடனும் ஆடிய விராட் கோலி அரைசதம் விளாசினார். மொத்தம் 49 பந்துகளை எதிர்கொண்ட அவர், 2 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
கோலியின் விக்கெட்டுக்கு பின்னர் வந்த அனுஜ் ராவத் 11 ஓட்டங்களில் வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
🧿🧿🧿🧿
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 25, 2024
pic.twitter.com/uIrhV1KS0a
அப்போது விஸ்வரூபமெடுத்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை சிதறடித்தார். அவருக்கு ஆதரவாக லாம்ரோர் அதிரடியில் மிரட்டினார்.
தினேஷ் கார்த்திக் விளாசல்
கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தினேஷ் கார்த்திக், அடுத்த பந்தில் பவுண்டரி விளாசி ஆட்டத்தை முடித்தார்.
THE MOST OUTRAGEOUS SHOT UNDER PRESSURE. 🤯
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 25, 2024
- Dinesh Karthik is here to stay...!!!pic.twitter.com/0es5Bdj7XP
இதன்மூலம் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்களும், லாம்ரோர் 8 பந்தில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 17 ஓட்டங்களும் எடுத்தனர்.
First W of the season. We open the account with 2 points. 🙌#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvPBKS pic.twitter.com/jZJfpEISEp
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 25, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |