பறந்த சிக்ஸர்கள்.. வானவேடிக்கை காட்டிய தினேஷ் கார்த்திக்!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 30 ஓட்டங்கள் விளாசி அதகளம் செய்தார்.
மும்பையின் வான்கடே மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. அதன்படி களமிறங்கிய பாப் டு பிளீசிஸ் அதிரடியில் மிரட்டினார். அவரைப் போல பட்டிடார், மேக்ஸ்வெல் ஆகியோரும் அதிரடியாக ஆடினர்.
19வது ஓவரில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சிக்ஸரை பறக்கவிட்டார். அதன் பின்னர் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த அவர், ஆறாவது பந்தில் பவுண்டரி விளாசினார்.
மொத்தம் 8 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக், ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 30 ஓட்டங்கள் எடுத்தார்.